siruppiddy

திங்கள், 30 டிசம்பர், 2013

ரயிலில் மோதி ஒருவர் பலி..

 கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று திங்கட்கிழமை பிற்பகல் பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் கண்டி, சுதுஹம்பொல எனுமிடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான ஒருவரே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வியாழன், 19 டிசம்பர், 2013

!!நேற்று இரவு “திருடர்கள் கைவரிசை” சிறுப்பிட்டியில் !!

  
அமைதியான இருந்த ஊர்களில் எங்குபார்தாலும் திருட்டுகள் மக்கள் நின்மதியை துலைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அந்தவகையில்  சிறுப்பிட்டியில் நேற்று இரவு திருடர்கள் கைவரிசை.இராச வீதியில் அமைந்துள்ள வீடுகளிலேயே திருட்டுகள் இடம்பெற்றுள்ளன என எமது நிருபர் அறியத்தந்துள்ளார் இதை புலத்தில் வாழும் எம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்..

திங்கள், 16 டிசம்பர், 2013

காய்கறிகளில் ஒன்றானசிவப்பு முள்ளங்கியின் மகத்துவங்கள் ??

 வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன.
அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இதயத்தின் நண்பன்
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

உறுதியான எலும்பு
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

எடை குறைப்பு
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

ஆஸ்துமாவிற்கு நிவாரணம்
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.

தோலுக்கு நண்பன்
பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.
சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

இரத்த அழுத்தத்திற்கு மருந்து
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.
மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது

சனி, 7 டிசம்பர், 2013

உதாசீனத்தால் மரணம் நேரின் காரணமானவருக்கு எதிராக கடும் சட்டம்

ஒருவரின் கவனயீனம் மற்றும் உதாசீனம் காரணமாக இன்னொருவர் மரணமடைய நேரிடுமாயின் மரணத்துக்கு காரணமானவருக்கு எதிரான சட்டங்கள் இனிமேல் கடுமையாக செயற்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக வழியிலிருந்த கல்லொன்றில் தடுக்கி வீழுந்த ஒருவர் மண்டை சிதறி உயிரிழப்பாராயின் அவர் தடுக்கி விழும் வகையில் கல்லை பாதையில் போட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

நிறுவனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறியுள்ள பொலிஸ் தலைமையகம், உதாரணமாக வீதி திருத்;த வேலையின்போது ஒரு கிடங்கு இருப்பதை தடுப்பு மூலம் காட்டத் தவறி, அதனுள் ஒரு குழந்தை விழுந்து இறக்குமாயின் அதற்கு பொறுப்பான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருமாறு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

திங்கள், 2 டிசம்பர், 2013

படைத்தலைமையக வைத்தியசாலையில் பணி புரிந்த பெண் டாக்டர் உயிரிழப்பு!


பலாலி படைத் தலைமையக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பெண் வைத்தியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஹடுவென பகுதியைச் சேர்ந்த 35 வயதான சஞ்சினி பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாலி படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிவில் வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது மயக்கமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வியாழன், 21 நவம்பர், 2013

மரண அறிவித்தல்:திரு தில்லைராஜா தர்மலிங்கம்

thillairajhaTharmalingam
 
பிறப்பு:4 ஓகஸ்ட் 1958  -இறப்பு:18 நவம்பர் 2013
யாழ். வயாவிளான் வன்னியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich Zollikon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைராஜா தர்மலிங்கம்(வெள்ளை) அவர்கள் 18-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேன், தீபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகஸ்வரி(இலங்கை), ஜெயராணி(இலங்கை), விஜயன்(சுவிஸ்- Lucerne) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷர்மிளா அவர்களின் அன்பு மாமனாரும்,

நளாயினி(இலங்கை), தர்மபாலன்(அவுஸ்திரேலியா), குணபாலன்(மாஸ்ரர்-  சுவிஸ் St.Gallen) காலஞ்சென்ற தனபாலன், குமுதினி(கனடா), நளினி(சுவிஸ்- Chur), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு திகதி: புதன்கிழமை 20/11/2013, 04:00 பி.ப — 06:00 பி.ப முகவரி: Friedhof Zollikon Wieslerstrasse 51 8702, Zollikon, Switzerland,
பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 04:00 பி.ப — 06:00 பி.ப முகவரி: Friedhof Zollikon Wieslerstrasse 51 8702, Zollikon, Switzerland,
பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 22/11/2013, 04:00 பி.ப — 06:00 பி.ப முகவரி: Friedhof Zollikon Wieslerstrasse 51 8702, Zollikon, Switzerland,
கிரியை திகதி: சனிக்கிழமை 23/11/2013, 11:00 மு.ப — 01:30 பி.ப முகவரி: Friedhof Zollikon Wieslerstrasse 51 8702, Zollikon, Switzerland, 

தொடர்புகளுக்கு
விஜயன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41789414385
புஸ்பநாதன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41788045158  

திங்கள், 4 நவம்பர், 2013

மன்னார் பாடசாலையின் அவலம்: சாமி வரம் கொடுத்தும்



மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னபுள்ளச்சி பொற்கேணியில் உள்ள பாடசாலை இயங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் குறித்த பாடசாலையினை இயக்குவற்கான அனுமதியினை இது வரை வழங்கவில்லை என சின்னபுள்ளச்சி பொற்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்

.இது தொடர்பாக அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்னபுள்ளச்சி பொற்கேணி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மன்-கார்மேல் நகர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை இது வரை இயங்காத நிலையில் உள்ளது.
யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட குறித்த கிராம மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் தற்போது மீண்டும் மீள் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வருடம் ஜனவரி மாதம் இப்பாடசாலை இயங்குவதற்கான அனுமதி கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.
இப்பாடசாலைக்கு என கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி(15-7-2013) அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.ஆனால் இப்பாடசாலை இது வரை இயங்காத நிலையில் உள்ளது.

இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரிய புள்ளச்சி பெற்கே
ணியில் உள்ள பாடசாலைக்கு பல மைல் தொலைவில் நடந்து செல்லுகின்றனர்.
தரம்-1 தொடக்கம் தரம்-5 வரையே குறித்த பாடசாலைகள் இயங் க வேண்டும். அதற்கான அனுமதிகள் ஏன் வழங்கப்படவில்லை என்று இது வரை தெரியவில்லை.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் குறித்த பாடசாலையினை எதிர் வரும் 2014 ஆம் ஆண்டு தை மாதமே திறக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் இப்பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பாடசாலைக்கென வகுப்பறைக்கட்டிடம் ஒன்று சேவாலங்கா மன்றத்தினால் யுத்த காலத்தில் கட்டப்பட்டது. அவை தற்போது சில விசமிகளினால் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்தினையும்,கட்டடங்களையும் சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை.
குறித்த வகுப்பறைக்கட்டிடங்கள் கட்டாக்காலி மாடுகளின் உறைவிடமாக மாறியுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்திற்கு பல முறை நேரடியாக சென்று கதைத்தும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர்.
இந்த அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குறித்த பாடசாலை அடுத்த வருடம் இயங்குமா என்ற சந்தேகம் எம் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எமது பாடசாலை கத்தோலிக்க கலவன் பாடசாலை.எனவே திறமை வாய்ந்த ஆரம்பக்கல்வி கத்தோலிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில்

பின்தங்கியுள்ள மாணவர்களையும் நல்ல நிலைக்கு உயர்த்த முடியும்.
எமது கிராமத்தை சுற்றியுள்ள பிர மதத்தவர்களின் நெருக்குதல்களுக்கு மத்தியிலும் துன்புருத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றோம்.
எனவே எமது கிராம மக்களின் கல்வி,ஆன்மீகம்,பொருளாதாரம் ,பௌதீக வளம்,கலாச்சாரம் போன்ற வற்றில அக்கரை செலுத்தி உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

புதன், 30 அக்டோபர், 2013

புத்தூரரில் நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர்:


நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர் மல்லாகம் நீதிமன்றத்தினால் 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். புத்தூர் வடக்கினைச் சேர்ந்த குறித்த ஆசிரியரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது,

நண்பர் தனது 24,000 ரூபா பெறுமதியான கமராவினை ஆசிரிய நண்பரிடம் கொடுத்துள்ளார். பின்னர் நண்பர் கமராவைக் கேட்டபொழுது தன்னிடம் தரவில்லையென ஆசிரியர் கூறிச் சென்றுவிட்டார். கமராவை தொலைத்தவர் உடனடியாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன்

 ஆசிரிய நண்பர் மீது சந்தேகம் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் ஆசிரியரிடம் விசாரணை செய்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில்

 திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். மல்லாகம் நீதவான் நீதிபதி பஷர் முஹமட் குற்றவாளியான ஆசிரியரை 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

புத்தூரில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு


புத்தூர் பகுதியில் இளம் பெண் ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வேளையில் தொலைபேசி அழைப்பொன்று வந்ததையடுத்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இன்று காலை வரை குறித்த யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வழியால் சென்ற பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புத்தூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழ் வர்த்தகர்மீது துப்பாக்கிச் சூடு: பெருந்தொகை பணமும் கொள்ளை


புத்­த­ளத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்­தகர் ஒரு­வரை துப்­பாக்­கியால் சுட்டு காயப்­ப­டுத்தி அவ­ரி­ட­மி­ருந்த பெருந்­தொகை பணத்தை கொள்­ளை­யிட்டு சென்­றுள்ள சம்­ப­வ­மொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

மோட்டார் சைக்­களில் வந்த துப்­பாக்கி தாரி­களே நேற்று இரவு 8.20 மணி­ய­ளவில் இந்த தாக்­கு­தலை நடத்­தி­விட்டு பணத்­தொ­கை­யி­னையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

புத்­தளம் நகரில் சில்­லறை வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டு­வரும் 61 வய­தான பர­மேஸ்­வரன் கந்­தையா என்­ப­வரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­காகி புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

புத்­தளம் ஸாஹிரா ஆரம்ப பாட­சாலை வீதி­யி­லுள்ள வண்­ணாக்­குளம் பிர­தே­சத்தில் வசித்­து­வரும் குறித்த வர்த்­தகர் மோட்டார் சைக்­கிளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ரது வீட்டின் அருகில் வைத்து இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும் குறித்த வர்த்­த­க­ரி­ட­மி­ருந்து 10 இலட்சம் ரூபா பணத்தொகை கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை

புதன், 23 அக்டோபர், 2013

ஆபத்து ஐயோ சிறிலங்காவுக்கு !: புலம்பும் சம்பிக்க


கூடங்குளம் அணுஆலை சிறிலங்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

 இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜப்பானின் புக்குஷிமாவில் இடம்பெற்ற அணுக் கசிவு போன்றதொரு சம்பவம் இடம்பெறவுள்ளதாகவும் இது சிறிலங்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்படுகின்றதா என்பது பற்றி தொடர்ந்தும் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின் சக்தி தேவைக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரையில் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு புகைப்படம்


பிரான்சின் நீதி அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு கட்சிப் பெண் ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்ஸ் பகுதியில் வருகின்ற ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட இருந்தவர் அன்னி சோபி லிகரே.
இந்நிலையில் இவர் அந்நாட்டின் நீதி அமைச்சரான கிறிஸ்டினா டாபிராவின் புகைப்படத்தையும், அருகில் ஒரு குரங்கின் புகைப்படத்தையும் இணைத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

பின்பு தனது நண்பர்களின் வற்புறுத்தலினால் அதனை நீக்கிவிட்டார். இருப்பினும் மீண்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் ஒரு குரங்கு என்றும் அவரது புகைப்படத்தை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள் எனவும் புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் கட்சி வேட்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படவுள்ளார் என்றும் இருப்பினும் கட்சியில் அவரது பங்கு மற்றும்

ஒழுக்கம் போன்றவற்றை விசாரித்த பின்னரே அவர் நீக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கட்சி உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு வெளியிட்டதற்கு இனவேறுபாடு பிரச்சனை தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

கொக்கோகோலா பயன்படுத்த வேண்டாம்!- அறிவிப்பு


வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கோ கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் ஐங்கரநேசன்.

விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ "பெப்சி' மற்றும் கொக்கோகோலா' போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம்.
எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது.

இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன் நின்று கொள்ளும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்..

திங்கள், 14 அக்டோபர், 2013

பதுளையில்உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை :


பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதுளை கெந்தகொல்லை பெருந்தோட்ட உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கெந்தகொல்லை பெருந்தோட்டத்தின் கள உத்தியோகத்தரான ஆர். எம். ஆனந்த ஜயசுந்தர வயது 50 என்பவரே இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

இறந்த மலரை நினைவுகூர்ந்த பாரீஸ்


 
பிரபல பின்னணி பாடகியான எதித் பியாப்பின் இறந்த நாள் நேற்று பாரிசில் அனுசரிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகியான எதித் பியார் தனது குரல் வளத்தால் அந்நாட்டினையே தன் கைவசப்படுத்தியவர்.
பல பாடல்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி கல்லீரல் பாதிப்பினால் உயிரிழந்தார்.

இவரது 50வது நினைவுநாளானது ஜீன் பாப்டிஸ் தேவாலயத்தில் பல பேர் முன்னிலையில் அனுசரிக்கப்பட்டது.

இவர் உலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

புதன், 9 அக்டோபர், 2013

90 வயது வரை வாழலாம் ஏழையாக இருந்தால் போதும்!

 
ஏழையாக இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பணம், வசதி இருந்தால் போதும் 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை ஆண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது.
மேலும் பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக புதிய முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தின் லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அதாவது, நீண்ட காலம் உயிர் வாழ பணம் போது என்பது பற்றி தான் ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
1950ல் இருந்து 2008ம் ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவிகிதம் 0.45% (70-74 வயது) அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதே வயதினரின் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன.

வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இது தொடர்பான ஆராய்ச்சி நீடிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 

திங்கள், 7 அக்டோபர், 2013

இளவரசர் ஹாரியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்


                                                            
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து இராணுவமும் இடம் பெற்றுள்ளது.
அப்போது அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். அதன்பிறகு இங்கிலாந்து திரும்பி விட்டார்.

இதில் இங்கிலாந்தின் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றிருந்தார். இவர் அங்குள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணிபுரிந்தார்.


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது, இளவரசர் ஹாரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார், அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம்.

அதற்கான தீவிர  முயற்சிகளிலும் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசராக இருக்கலாம்.
ஆனால் எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண இராணுவ வீரர்தான் என தெரிவித்துள்ளார்
 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தீபாவளி பண்டிகை முற்பணமாக 10,000 ரூபா

 
விலைவாசி ஏற்றத்தினால் பொருளாதாரச் சுமையில் வாடும் தோட்டத் தொழிலாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக 10, 000 ரூபா பண்டிகை முற்பணமாக வழங்க வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் இரண்டு முறை சொற்ப சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதும் அந்த சம்பள அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் தற்போது 10, 000 ரூபா

முற்பணமாக வழங்க வேண்டும் என்பதை சகல தொழிற்சங்கங்களும் புரிந்து கொண்டு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு அவர் அவசர கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் சமய, கலாசார பண்டிகையான தீபாவளியை தொழிலாளர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது அவசியமாகும்.
தமிழர்களின் சம்பிரதாய சமய வழிபாடுகளில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் சம்பள உயர்வை மட்டுமே பேசி தீர்மானித்துள்ளார்கள். மற்றைய விடயங்கள் பிறகு பேசி தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

சம்பள பேச்சை மட்டுமே ஒரே நாளில் பேசித் தீர்மானித்தவர்கள் இதர விடயங்களையும் உடனடியாக பேசித் தீர்மானிக்காமல் இழுத்தடித்து வருவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படுவதை இவர்களின் அசமந்த போக்குகள் வெளிப்படுத்தியுள்ளதை சகல தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் தொழிலாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி சாதி, மத, இனவாத பேச்சுக்களின் மூலம் அரசியல் நாடகமாடுபவர்கள் வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கத்திடம் இன்றுவரை நிவாரணங்களை பெற்றுக்கொடுக்காமல் சம்பளத்தில் முற்பணம் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது

சனி, 5 அக்டோபர், 2013

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு??


  கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் பூகம்பம் அபாயம் இருப் பதாகவும் இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பெரிய வெடிப்பாக மாறி வருவ தாகவும், பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது எனவும், இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்

வியாழன், 3 அக்டோபர், 2013

இங்கிலாந்து, பின்லாந்து பாஸ்போர்ட் இருக்கா? உலகத்தையே சுற்றி..


பின்லாந்து, இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் இந்த உலகத்தையே சுற்றி பார்க்கலாம்.

ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம், 2013ம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதவாது, எந்நாடு விசா இல்லாமல் மக்களை சுதந்திரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்குகிறது என்பதை பொறுத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அதே போல சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்க பாஸ்போர்ட்கள் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளன. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.
மிக மோசமான பட்டியலில் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
அதேசமயம், இந்திய பாஸ்போர்ட்கள் மூலம் 52 நாடுகளுக்கு செல்ல முடியும்
 

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்து


கடற் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்திற்குள்ளாகி உள்ளது.
அதில் 5 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாக்டர் செங்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

சனி, 21 செப்டம்பர், 2013

சிகரெட்டுகளை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவு


டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளதுடன் அதனை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வந்த மிஹின் லங்கா

விமானத்திலேயே இவை இங்கு கடத்திவரப்பட்டதாகவும் இதனை தாயும் மகளொருவருமே கடத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தொண்டமானாறு பாலம் திறப்பு200 மில்லயின் ரூபா செலவில்


இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் மஹிந்த சிந்தனையின் துரிதப்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 129 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்ட்டுள்ளது.{புகைப்படங்கள்}








 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சைவ பிரியரா நீங்கள்? இதோ வந்துவிட்டது செயற்கை முட்டை


 
சைவ பிரியர்களுக்கு தாவரப் பொருட்களை கொண்டு செயற்கையான முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவுப் பொருள் விஞ்ஞானிகள் தாவரப் பொருட்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கியுள்ளனர்.
அதாவது பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருட்களை கொண்டு இதனை தயாரித்துள்ளார்கள்.
இந்த முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
கோழி முட்டையின் விலையை விட 19 சதவிகிதம் குறைவு என்றம், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் தெரிவித்துள்ளார்.
 
.

புதன், 11 செப்டம்பர், 2013

நண்பர்களே பசுவின் கண்களில் மிளகாய்:


 இந்தச்சம்பவம்நமது ஊரிலும்நிகழ்ந்ததுநேரில்பார்த்தோம்
பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்
.
அப்படி விழாமல் இருக்க, பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள்.

ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும்.
அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..?
முடிவு உங்கள்கையில்
 

வியாழன், 5 செப்டம்பர், 2013

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..


1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்.

 ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காக திரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்.

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்
.
7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்.
8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.

 # தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இந்த வார கலாரசிகன் ,,,,,

காலம் ஏன் சிலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும், நடத்திக் காட்டுகிறது என்பது விளக்க முடியாத புதிர். ஒருவேளை நான் "தினமணி' நாளிதழுக்கு வராமலே இருந்திருந்தால், நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல தமிழ் வளர்த்த சான்றோரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமலே போயிருக்கும்.
கம்பன் பெயர் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தைக் கட்டிக் காத்தவர் மட்டுமல்ல, கம்பனில் தோய்ந்த எத்தனை எத்தனையோ அறிஞர்களை அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டப் பகுதியினருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் என்றால் உடனே நினைவுக்கு வருவது இரண்டுதான். முதலாவது, அவர் நம்மிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஏதோ உடன்பிறந்தவர்போல அவர் சகஜமாகப் பழகும் பாங்கு, யாராக இருந்தாலும் அவரை நேசிக்க வைத்துவிடும். இரண்டாவதாக, அவரது விருந்தோம்பல். என்னைப் போல, அவரது வீட்டிற்குப் போய் அந்த விருந்தோம்பலை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுகம். திகட்டடித்து விடுவார்.
தான் தில்லிக்குப் போனது, பண்டித ஜவஹர்லால் நேருவை தீன்மூர்த்தி பவனத்தில் சந்தித்தது, அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசியது போன்றவற்றை மாரிமுத்துச் செட்டியாரே சொல்லிக் கேட்க வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் அவருக்கும் சலிக்காது. எத்தனை தடவை கேட்டாலும் நமக்கும் புளிக்காது. அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வார்.
தமிழக அரசு கம்பன் விருது அறிவித்தபோது திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார், கோவை நஞ்சுண்டன், ராஜபாளையம் முத்துக்கிருஷ்ண ராசா, மதுரை சங்கர சீத்தாராமன், காரைக்குடி பழ. பழனியப்பன் முதலிய மூத்த கம்பன் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கம்பன் புகழ் பரப்பும் பேச்சாளர்களைக் கௌரவிப்பது எத்தனை முக்கியமோ, அதைவிட அந்தப் பேச்சாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து, சாமானியத் தமிழனும் கம்பன் கவியமுதைப் பருக வழிகோலும் கம்பன் கழகத்தவர்களை விருது கொடுத்து கெüரவிப்பது அதைவிட அவசியம்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் சனிக்கிழமை காலை 11 மணிக்குக் காலமாகி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமுதல், எதையோ இழந்துவிட்டதுபோல இதயம் கனக்கிறது. கம்பன் கழகப் பணிகள் தொடர்வதும், தொடர்ந்து சிறப்பாக ஆண்டுதோறும் திருப்பத்தூரில் கம்பன் விழா நடைபெறுவதும்தான் மாரிமுத்துச் செட்டியாருக்கு செய்யும் நிஜமான அஞ்சலியாக இருக்க முடியும்!

------------------------------------------------------------------

1940-ஆம் ஆண்டு மார்ச் 9, 10 நாள்களில், சென்னையில் "கலித்தொகை மாநாடு' ஒன்று ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் தலைமையில் நடந்தது. கலித்தொகையில் வரும் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்கிற ஐந்து பகுதிகளைப் பற்றியும் முறையே, கே. ஞானம்பாள் அம்மையார், வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, வித்துவான் மு. வரதராசன், வித்துவான் நடேச சர்மா, இளவழகனார் ஆகிய ஐந்து தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினர்.
"கலித்தொகை'யில் அவரவர்க்குத் தரப்பட்ட பகுதி பற்றி நுண்மான் நுழைபுலத்துடன் அந்தந்த அறிஞர்கள், இனியும் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேருடைய கருத்துகளை இங்கே பதிவு செய்வது அவசியம்.
தான் எடுத்துக்கொண்ட "குறிஞ்சிக் கலி' பற்றிப் பேச வந்த வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, "கலித்தொகை'யை இயற்றியது ஒருவரா, ஐவரா என்கிற சர்ச்சையை முதலில் எழுப்பி, அதற்கு முற்றும் வைக்கிறார்.
""பெருங்கடுங்கோள் பாலை, கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம், அருஞ்சோழன்
நன்லுத் திரன்முல்லை, நல்லந்து வானெய்தல்
கல்வியலார் கண்ட கலி''
என்கிற வெண்பா கலித்தொகை புலவர் ஐவரால் பாடப்பட்டதாகத் தெரிவிப்பதை ஆதாரமற்ற கட்டிவிட்ட வெண்பா என்று நிறுவிய பிறகுதான், "குறிஞ்சிக் கலி' பற்றிய விளக்கத்திற்கே செல்கிறார் இராசமாணிக்கனார்.
""சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைப் புலவராக இருந்த கே.என். சிவராஜப் பிள்ளை, "கலித்தொகை' ஆசிரியர் ஒருவரே என முடிவு கட்டினார். இவ் வெண்பா எந்தக் கலித்தொகை ஏட்டிலும் இல்லை. மாயமாய் வந்ததாகும். இது முற்றிலும் ஆதாரமற்ற, இக்காலப் புலவர் எவரோ கட்டிவிட்ட பொய்யாகும் என்பதே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறையினரான எஸ். வையாபுரிப் பிள்ளை, வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் ஆகியோர் கருத்துமாகும்'' என்று விளக்கி அந்தச் சர்ச்சைக்கே முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"மருதக் கலி' பற்றிய தனது சொற்பொழிவை முடிக்கும்போது பேராசிரியர் மு.வ., ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அது இன்றைக்கும் பொருத்தமான கருத்து.
""கலித்தொகையைக் கற்று அறிந்து ஏத்துதல் நமது கடமை. ஆனால், உண்மையை ஆராயுங்கால், தமிழர் கலை நூல்களைக் கற்பதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்றே தெரிகிறது. மொழி ஆக்கம் பெற்றாலன்றிக் கலை ஆக்கம் பெறுமோ? இங்கு தாய்மொழியாகிய தமிழிலேயே எழுதுதல், பேசுதல், வழக்காடுதல், அரசாளுதல் ஆகிய எல்லாம் நடைபெறும் நாள் வந்தாலன்றி நமது எண்ணம் ஈடேறுமோ?''
இரண்டு நாள்கள் நடந்த அந்தக் கலித்தொகை மாநாட்டுச் சொற்பொழிவுகளை அப்படியே தொகுத்து, தலைவர் முன்னுரையுடன் 1940} ஆம் ஆண்டிலேயே புத்தகமாக வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இப்போது மறுபதிப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. கலித்தொகை ஆய்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களும், ஏன், சராசரித் தமிழுணர்வாளரும்கூடத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான பல கருத்துகளும், கலித்தொகைச் சிந்தனைகளும், அற்றைநாள் தமிழர்தம் வாழ்வு நெறிகளும் அவர்தம் சொற்பொழிவில் காணக் கிடக்கின்றன.
இதுபோன்ற இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வரங்கங்கள் போன்றவை பல்கலைக்கழக வளாகங்களுக்கு உள்ளே முடங்கிப் போய்க் கிடக்காமல், எப்போது தமிழர்தம் மத்தியில் வெகுஜன விருப்பத்துடன் நிகழுமோ, அப்போதுதான் தமிழ் வளர்ச்சி காணும். அந்த நாளும் வந்திடாதோ...?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

புத்தூர் மக்களுக்கு நவக்கிரி நிலாவரை கிணற்றில் இருந்து குடிநீர்!!!

p1
  வரலாற்று சிறப்புமிக்க நவக்கிரி கிராமத்தில் உள்ள நிலாவரை என்ற கிணற்றில் இருந்து   புத்தூர் பிரதேசத்தில் உள்ள நிலாவரை என்ற ஆழத்தை கண்டுப்பிடிக்க முடியாத  கிணற்றில் இருந்து  21 கிலோ மீற்றர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிணறு அமைந்துள்ள பிரதேசம் தொல்பொருள் ஆராச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும். அந்த பகுதியில் வேறு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்திடம் அனுமதிபெற வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்ட நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அதிகாரிகள் அதற்கான அனுமதியை பெற்று கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தொல் பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அதிகாரியான ஜயந்த விஜேரடனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய அதிகாரிகள், தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்கவிடம் இருந்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக நீர் வழங்கல் திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் புத்தூர் பிரதேசத்தை சூழவுள்ள 21 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திப்
 பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விசேட திட்டம் குறித்து ஆய்வு
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் விவசாய உற்பத்தி, ஏற்றுமதி, சந்தையை ஏற்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய விசேட கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள்,
 விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், அகில இலங்கை விவசாயக் கூட்டுறவுச் சங்க தலைவர் நவரட்ண, விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், சரத் பிரேம குமார, அத்துல பிரியந்த, சந்தண பிரியர், கே.எல்.பெரேரா எனப்பலரும் கலந்துகொண்டனர்{புகைப்படங்கள்,}


p1
p2
p0
p3

புதன், 17 ஜூலை, 2013

நிலாவரை நவக்கிரியின் முக்கிய பார்வை???

 
 
நிலாவரை நவக்கிரியில் மூலிகைத்தோட்டம் ,ஆயுள் வேத மருந்தகம் ஆகிய வற்றின் முக்கிய புகைப்படங்களுடன் அங்கு இடம் பெற்ற விழாவின் புகைப் படங்கள் இணைப்பு ,,