siruppiddy

திங்கள், 30 டிசம்பர், 2013

ரயிலில் மோதி ஒருவர் பலி..

 கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று திங்கட்கிழமை பிற்பகல் பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் கண்டி, சுதுஹம்பொல எனுமிடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான ஒருவரே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வியாழன், 19 டிசம்பர், 2013

!!நேற்று இரவு “திருடர்கள் கைவரிசை” சிறுப்பிட்டியில் !!

  
அமைதியான இருந்த ஊர்களில் எங்குபார்தாலும் திருட்டுகள் மக்கள் நின்மதியை துலைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அந்தவகையில்  சிறுப்பிட்டியில் நேற்று இரவு திருடர்கள் கைவரிசை.இராச வீதியில் அமைந்துள்ள வீடுகளிலேயே திருட்டுகள் இடம்பெற்றுள்ளன என எமது நிருபர் அறியத்தந்துள்ளார் இதை புலத்தில் வாழும் எம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்..

திங்கள், 16 டிசம்பர், 2013

காய்கறிகளில் ஒன்றானசிவப்பு முள்ளங்கியின் மகத்துவங்கள் ??

 வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன.
அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இதயத்தின் நண்பன்
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

உறுதியான எலும்பு
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

எடை குறைப்பு
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

ஆஸ்துமாவிற்கு நிவாரணம்
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.

தோலுக்கு நண்பன்
பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.
சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

இரத்த அழுத்தத்திற்கு மருந்து
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.
மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது

சனி, 7 டிசம்பர், 2013

உதாசீனத்தால் மரணம் நேரின் காரணமானவருக்கு எதிராக கடும் சட்டம்

ஒருவரின் கவனயீனம் மற்றும் உதாசீனம் காரணமாக இன்னொருவர் மரணமடைய நேரிடுமாயின் மரணத்துக்கு காரணமானவருக்கு எதிரான சட்டங்கள் இனிமேல் கடுமையாக செயற்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக வழியிலிருந்த கல்லொன்றில் தடுக்கி வீழுந்த ஒருவர் மண்டை சிதறி உயிரிழப்பாராயின் அவர் தடுக்கி விழும் வகையில் கல்லை பாதையில் போட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

நிறுவனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறியுள்ள பொலிஸ் தலைமையகம், உதாரணமாக வீதி திருத்;த வேலையின்போது ஒரு கிடங்கு இருப்பதை தடுப்பு மூலம் காட்டத் தவறி, அதனுள் ஒரு குழந்தை விழுந்து இறக்குமாயின் அதற்கு பொறுப்பான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருமாறு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

திங்கள், 2 டிசம்பர், 2013

படைத்தலைமையக வைத்தியசாலையில் பணி புரிந்த பெண் டாக்டர் உயிரிழப்பு!


பலாலி படைத் தலைமையக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பெண் வைத்தியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஹடுவென பகுதியைச் சேர்ந்த 35 வயதான சஞ்சினி பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாலி படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிவில் வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது மயக்கமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.