siruppiddy

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தீபாவளி பண்டிகை முற்பணமாக 10,000 ரூபா

 
விலைவாசி ஏற்றத்தினால் பொருளாதாரச் சுமையில் வாடும் தோட்டத் தொழிலாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக 10, 000 ரூபா பண்டிகை முற்பணமாக வழங்க வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் இரண்டு முறை சொற்ப சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதும் அந்த சம்பள அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் தற்போது 10, 000 ரூபா

முற்பணமாக வழங்க வேண்டும் என்பதை சகல தொழிற்சங்கங்களும் புரிந்து கொண்டு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு அவர் அவசர கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் சமய, கலாசார பண்டிகையான தீபாவளியை தொழிலாளர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது அவசியமாகும்.
தமிழர்களின் சம்பிரதாய சமய வழிபாடுகளில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் சம்பள உயர்வை மட்டுமே பேசி தீர்மானித்துள்ளார்கள். மற்றைய விடயங்கள் பிறகு பேசி தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

சம்பள பேச்சை மட்டுமே ஒரே நாளில் பேசித் தீர்மானித்தவர்கள் இதர விடயங்களையும் உடனடியாக பேசித் தீர்மானிக்காமல் இழுத்தடித்து வருவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படுவதை இவர்களின் அசமந்த போக்குகள் வெளிப்படுத்தியுள்ளதை சகல தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் தொழிலாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி சாதி, மத, இனவாத பேச்சுக்களின் மூலம் அரசியல் நாடகமாடுபவர்கள் வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கத்திடம் இன்றுவரை நிவாரணங்களை பெற்றுக்கொடுக்காமல் சம்பளத்தில் முற்பணம் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக