siruppiddy

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்து


கடற் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்திற்குள்ளாகி உள்ளது.
அதில் 5 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாக்டர் செங்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

சனி, 21 செப்டம்பர், 2013

சிகரெட்டுகளை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவு


டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளதுடன் அதனை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வந்த மிஹின் லங்கா

விமானத்திலேயே இவை இங்கு கடத்திவரப்பட்டதாகவும் இதனை தாயும் மகளொருவருமே கடத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தொண்டமானாறு பாலம் திறப்பு200 மில்லயின் ரூபா செலவில்


இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் மஹிந்த சிந்தனையின் துரிதப்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 129 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்ட்டுள்ளது.{புகைப்படங்கள்}








 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சைவ பிரியரா நீங்கள்? இதோ வந்துவிட்டது செயற்கை முட்டை


 
சைவ பிரியர்களுக்கு தாவரப் பொருட்களை கொண்டு செயற்கையான முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவுப் பொருள் விஞ்ஞானிகள் தாவரப் பொருட்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கியுள்ளனர்.
அதாவது பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருட்களை கொண்டு இதனை தயாரித்துள்ளார்கள்.
இந்த முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
கோழி முட்டையின் விலையை விட 19 சதவிகிதம் குறைவு என்றம், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் தெரிவித்துள்ளார்.
 
.

புதன், 11 செப்டம்பர், 2013

நண்பர்களே பசுவின் கண்களில் மிளகாய்:


 இந்தச்சம்பவம்நமது ஊரிலும்நிகழ்ந்ததுநேரில்பார்த்தோம்
பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்
.
அப்படி விழாமல் இருக்க, பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள்.

ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும்.
அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..?
முடிவு உங்கள்கையில்
 

வியாழன், 5 செப்டம்பர், 2013

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..


1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்.

 ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காக திரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்.

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்
.
7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்.
8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.

 # தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்