siruppiddy

புதன், 30 அக்டோபர், 2013

புத்தூரரில் நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர்:


நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர் மல்லாகம் நீதிமன்றத்தினால் 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். புத்தூர் வடக்கினைச் சேர்ந்த குறித்த ஆசிரியரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது,

நண்பர் தனது 24,000 ரூபா பெறுமதியான கமராவினை ஆசிரிய நண்பரிடம் கொடுத்துள்ளார். பின்னர் நண்பர் கமராவைக் கேட்டபொழுது தன்னிடம் தரவில்லையென ஆசிரியர் கூறிச் சென்றுவிட்டார். கமராவை தொலைத்தவர் உடனடியாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன்

 ஆசிரிய நண்பர் மீது சந்தேகம் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் ஆசிரியரிடம் விசாரணை செய்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில்

 திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். மல்லாகம் நீதவான் நீதிபதி பஷர் முஹமட் குற்றவாளியான ஆசிரியரை 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

புத்தூரில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு


புத்தூர் பகுதியில் இளம் பெண் ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வேளையில் தொலைபேசி அழைப்பொன்று வந்ததையடுத்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இன்று காலை வரை குறித்த யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வழியால் சென்ற பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புத்தூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழ் வர்த்தகர்மீது துப்பாக்கிச் சூடு: பெருந்தொகை பணமும் கொள்ளை


புத்­த­ளத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்­தகர் ஒரு­வரை துப்­பாக்­கியால் சுட்டு காயப்­ப­டுத்தி அவ­ரி­ட­மி­ருந்த பெருந்­தொகை பணத்தை கொள்­ளை­யிட்டு சென்­றுள்ள சம்­ப­வ­மொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

மோட்டார் சைக்­களில் வந்த துப்­பாக்கி தாரி­களே நேற்று இரவு 8.20 மணி­ய­ளவில் இந்த தாக்­கு­தலை நடத்­தி­விட்டு பணத்­தொ­கை­யி­னையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

புத்­தளம் நகரில் சில்­லறை வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டு­வரும் 61 வய­தான பர­மேஸ்­வரன் கந்­தையா என்­ப­வரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­காகி புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

புத்­தளம் ஸாஹிரா ஆரம்ப பாட­சாலை வீதி­யி­லுள்ள வண்­ணாக்­குளம் பிர­தே­சத்தில் வசித்­து­வரும் குறித்த வர்த்­தகர் மோட்டார் சைக்­கிளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ரது வீட்டின் அருகில் வைத்து இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும் குறித்த வர்த்­த­க­ரி­ட­மி­ருந்து 10 இலட்சம் ரூபா பணத்தொகை கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை

புதன், 23 அக்டோபர், 2013

ஆபத்து ஐயோ சிறிலங்காவுக்கு !: புலம்பும் சம்பிக்க


கூடங்குளம் அணுஆலை சிறிலங்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

 இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜப்பானின் புக்குஷிமாவில் இடம்பெற்ற அணுக் கசிவு போன்றதொரு சம்பவம் இடம்பெறவுள்ளதாகவும் இது சிறிலங்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்படுகின்றதா என்பது பற்றி தொடர்ந்தும் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின் சக்தி தேவைக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரையில் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு புகைப்படம்


பிரான்சின் நீதி அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு கட்சிப் பெண் ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்ஸ் பகுதியில் வருகின்ற ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட இருந்தவர் அன்னி சோபி லிகரே.
இந்நிலையில் இவர் அந்நாட்டின் நீதி அமைச்சரான கிறிஸ்டினா டாபிராவின் புகைப்படத்தையும், அருகில் ஒரு குரங்கின் புகைப்படத்தையும் இணைத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

பின்பு தனது நண்பர்களின் வற்புறுத்தலினால் அதனை நீக்கிவிட்டார். இருப்பினும் மீண்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் ஒரு குரங்கு என்றும் அவரது புகைப்படத்தை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள் எனவும் புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் கட்சி வேட்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படவுள்ளார் என்றும் இருப்பினும் கட்சியில் அவரது பங்கு மற்றும்

ஒழுக்கம் போன்றவற்றை விசாரித்த பின்னரே அவர் நீக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கட்சி உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு வெளியிட்டதற்கு இனவேறுபாடு பிரச்சனை தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

கொக்கோகோலா பயன்படுத்த வேண்டாம்!- அறிவிப்பு


வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கோ கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் ஐங்கரநேசன்.

விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ "பெப்சி' மற்றும் கொக்கோகோலா' போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம்.
எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது.

இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன் நின்று கொள்ளும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்..

திங்கள், 14 அக்டோபர், 2013

பதுளையில்உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை :


பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதுளை கெந்தகொல்லை பெருந்தோட்ட உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கெந்தகொல்லை பெருந்தோட்டத்தின் கள உத்தியோகத்தரான ஆர். எம். ஆனந்த ஜயசுந்தர வயது 50 என்பவரே இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

இறந்த மலரை நினைவுகூர்ந்த பாரீஸ்


 
பிரபல பின்னணி பாடகியான எதித் பியாப்பின் இறந்த நாள் நேற்று பாரிசில் அனுசரிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகியான எதித் பியார் தனது குரல் வளத்தால் அந்நாட்டினையே தன் கைவசப்படுத்தியவர்.
பல பாடல்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி கல்லீரல் பாதிப்பினால் உயிரிழந்தார்.

இவரது 50வது நினைவுநாளானது ஜீன் பாப்டிஸ் தேவாலயத்தில் பல பேர் முன்னிலையில் அனுசரிக்கப்பட்டது.

இவர் உலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

புதன், 9 அக்டோபர், 2013

90 வயது வரை வாழலாம் ஏழையாக இருந்தால் போதும்!

 
ஏழையாக இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பணம், வசதி இருந்தால் போதும் 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை ஆண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது.
மேலும் பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக புதிய முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தின் லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அதாவது, நீண்ட காலம் உயிர் வாழ பணம் போது என்பது பற்றி தான் ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
1950ல் இருந்து 2008ம் ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவிகிதம் 0.45% (70-74 வயது) அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதே வயதினரின் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன.

வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இது தொடர்பான ஆராய்ச்சி நீடிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 

திங்கள், 7 அக்டோபர், 2013

இளவரசர் ஹாரியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்


                                                            
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து இராணுவமும் இடம் பெற்றுள்ளது.
அப்போது அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். அதன்பிறகு இங்கிலாந்து திரும்பி விட்டார்.

இதில் இங்கிலாந்தின் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றிருந்தார். இவர் அங்குள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணிபுரிந்தார்.


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது, இளவரசர் ஹாரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார், அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம்.

அதற்கான தீவிர  முயற்சிகளிலும் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசராக இருக்கலாம்.
ஆனால் எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண இராணுவ வீரர்தான் என தெரிவித்துள்ளார்
 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தீபாவளி பண்டிகை முற்பணமாக 10,000 ரூபா

 
விலைவாசி ஏற்றத்தினால் பொருளாதாரச் சுமையில் வாடும் தோட்டத் தொழிலாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக 10, 000 ரூபா பண்டிகை முற்பணமாக வழங்க வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் இரண்டு முறை சொற்ப சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதும் அந்த சம்பள அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் தற்போது 10, 000 ரூபா

முற்பணமாக வழங்க வேண்டும் என்பதை சகல தொழிற்சங்கங்களும் புரிந்து கொண்டு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு அவர் அவசர கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் சமய, கலாசார பண்டிகையான தீபாவளியை தொழிலாளர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது அவசியமாகும்.
தமிழர்களின் சம்பிரதாய சமய வழிபாடுகளில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் சம்பள உயர்வை மட்டுமே பேசி தீர்மானித்துள்ளார்கள். மற்றைய விடயங்கள் பிறகு பேசி தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

சம்பள பேச்சை மட்டுமே ஒரே நாளில் பேசித் தீர்மானித்தவர்கள் இதர விடயங்களையும் உடனடியாக பேசித் தீர்மானிக்காமல் இழுத்தடித்து வருவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படுவதை இவர்களின் அசமந்த போக்குகள் வெளிப்படுத்தியுள்ளதை சகல தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் தொழிலாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி சாதி, மத, இனவாத பேச்சுக்களின் மூலம் அரசியல் நாடகமாடுபவர்கள் வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கத்திடம் இன்றுவரை நிவாரணங்களை பெற்றுக்கொடுக்காமல் சம்பளத்தில் முற்பணம் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது

சனி, 5 அக்டோபர், 2013

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு??


  கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் பூகம்பம் அபாயம் இருப் பதாகவும் இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பெரிய வெடிப்பாக மாறி வருவ தாகவும், பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது எனவும், இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்

வியாழன், 3 அக்டோபர், 2013

இங்கிலாந்து, பின்லாந்து பாஸ்போர்ட் இருக்கா? உலகத்தையே சுற்றி..


பின்லாந்து, இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் இந்த உலகத்தையே சுற்றி பார்க்கலாம்.

ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம், 2013ம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதவாது, எந்நாடு விசா இல்லாமல் மக்களை சுதந்திரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்குகிறது என்பதை பொறுத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அதே போல சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்க பாஸ்போர்ட்கள் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளன. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.
மிக மோசமான பட்டியலில் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
அதேசமயம், இந்திய பாஸ்போர்ட்கள் மூலம் 52 நாடுகளுக்கு செல்ல முடியும்