siruppiddy

புதன், 26 ஜூன், 2013

மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல்???

 
யாழ் கந்தரோடைப் பகுதியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கா­லத்தில் பயன்ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் அந்த இடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து இப்பொருட்கள் எக்காலத்துக்குரியவை என்பதை கண்டுபிடிப்பதற்காக அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர்.
ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்துவுக்கு முன் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்ட
றியப்பட்டுள்ளது. ஓட்டுத் துண்டுகள் சுமார் 25௦௦ ஆண்டு­களுக்கு முற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பேராசி­ரியர் கலாநிதி மா. பவானி இதனை ஆய்விற்கு உட்படுத்தி இருந்தார்.
தரையிலிருந்து நாலடி ஆழத்தில் தோண்டும்போதே நான்கு கால்களையுடைய இந்த அம்மிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமானியர்களின் நாணயங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான சுடுமண்ணினால் செய்யப்பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வம்மிக் கல்லின் மாதிரியை இந்தியா, தமிழ் நாட்டில் கொடுமலை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனாலேயே இவ்வகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

மரத்தில் ஏறும் இயந்திரம் கண்டு பிடிப்பு**


தென்னை ! அனைவரும் பார்பதற்கு உண்மையில் ஓர் வியாபாக தன் உள்ளது நன்றாக காணொளி யை பாருங்கள்..

செவ்வாய், 11 ஜூன், 2013

பீட்ரூட்டின் மகத்துவங்கள்


இனிப்புச் சுவையுடன் அடர்ந்து சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டில் அதிகளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம்.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகிவிடும்.
சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சுத்தமாக இருக்கும்.
இரத்த சோகை
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
புற்றுநோய்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
செரிமான பிரச்சனை
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.
மறதி
பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால் மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி(Dementia) மற்றும் ஞாபக மறதியை(Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீப்புண்
கையை தீயில் சுட்டுக் கொண்டால் அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
பொடுகு
பொடுகு தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகை போக்கிவிடலாம்
 

வியாழன், 6 ஜூன், 2013

ஜெனீவாவின் SGS நிறுவனம் பங்குகளை வாங்கிய பெல்ஜியம்

ஜெனீவாவின் SGS நிறுவனம் பங்குகளை வாங்கிய பெல்ஜியம்
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா பரிசோதனைப் பணிகளை செய்யும் SGS நிறுவனத்திடமிருந்து, இரண்டு பில்லியன் யூரோவுக்கு 15 சதவிகிதம் பங்குகளை(15-percent stake) பெல்ஜியத்திலுள்ள பிரக்சல்ஸ் லேம்பர்ட் என்ற நிறுவனம் வாங்குகிறது.
ஜெனீவாவில் SGS நிறுவனத்தில் உலகளவில் 75000 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு இந்நிறுவனத்தின் விற்பனை 5.6 பில்லியன் பிராங்கை எட்டியது.
பெல்ஜியம் நிறுவனமாக SGB இன் உரிமையாளரான ஆல்பெர்ட் பெராரே கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ஃபியட்-க்ரைஸ்பெர் கார் தயாரிப்பாளரான எக்ஸாரி இடம் இருந்து 15 சதவிகிதம் பங்குகளை செரீனா என்ற நிறுவனம் வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்
 

திங்கள், 3 ஜூன், 2013

விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைப்பு

களுவாஞ்சிகுடி, ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் உள்ள மூலவிக்கிரகங்கள், நவக்கிரகங்கள் என்பன இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, அதன்கீழ் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருந்த தங்கத்தகடுகள் திருடப்பட்டுள்ளதுடன் ஆலய சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன,மட்டக்களப்பு – குருக்கள் மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்,