siruppiddy

புதன், 7 மே, 2014

மரண அறிவித்தல் திரு பாலசிங்கம் திலகவதி



தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
  அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் நவக்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் திலகவதி 06/05/2014 (செவ்வாய் கிழமை )அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா அவர்களின் அன்பு ம...களும் காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் அவர்களின் அன்பு மருமகளும் பாலசிங்கத்தின் ஆருயிர் மனைவியும் கமலநாயகி, இராஜசேகரம்(பிரான்ஸ்), சாந்தநாயகி,காலஞ்சென்ற சத்தியசீலன், நந்தினி, மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குகராசா,கலாநாயகி(பிரான்ஸ்),குலராசன்,சிவபாதம்,ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் வஜீலன்,துளசி,டினோஜா,ஜனோஜா,கிருஜா,நிரோசியா,மிதுசாந்த்,யசிந்தா,தர்ஷா,டிலக்சன்,டர்சான் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07/05/2014 அன்று பி.ப 02 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக நிலாவரை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும், இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொ.பே :-0217902741
கை . தொ :-0778062803 தகவல்
குடும்பத்தினர்..நவக்கிரி உறவுகள்
 

திங்கள், 5 மே, 2014

கதிரிப்பாயில் படுகொலை செய்யப்பட்டவர்கள் !

  நேற்றைய தினம் கதிரிப்பாய் அச்சுவேலிப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடையாளங்காணப்பட்டு, பெயர்கள் மற்றும் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (படங்கள் உள்ளே) ( நிற்குணாநந்தன் அருள்நாயகி, யசோதரன் மதுசா, நிற்குணாநந்தன் சுபாங்கன் ஆகிய மூவருமே படு கொலை செய்யப்பட்டவர்களாவார்கள்.
 
 

ஞாயிறு, 4 மே, 2014

கதிரிப்பாய் முக்கொலை சந்தேகநபர் கைது

யாழ். கதிரிப்பாய்  அச்சுவேலியில்  ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று  அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று  காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததினையடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
கதிரிப்பாய் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை.

இந்தக் கொலை தொடர்பாக அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக்கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்து விட்டு தப்பி செல்ல திட்ட மிட்டு இருந்திருக்கலாம் என அயலவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பொலிஸ் நிலையத்தை அகற்றுவதை தடுத்து

.வவுனியா பண்டாரிக்குளம் “பைட்டர் கிறெளன்ட்” என்று அழைக்கப்படும் பொலிஸ் நிலையம் பொது மக்களின் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவில் சமுக செயல்பாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது.
பொது மக்களின் குடிமனைகளுக்கிடையே அமைந்திருக்கும் குறித்த பொலிஸ் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக சிவில் சமுக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் “குறித்த பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டாமென்றும், பொலிஸ் நிலையம் குடிமனைகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது தமக்கு நன்மை என்றும் பொதுமக்கள் கூறுவது போன்று” பொலிஸாரால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில், பண்டாரிக்குளத்திலுள்ள வர்த்தக வாணிப நிலையங்கள், பொது மக்களின் வீடுகளுக்கு சென்றும், வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களை மறித்தும்

கையெழுத்து பெறும் நடவடிக்கையில் இன்று காலையிலிருந்து பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 16 வயது பொதுமகன் ஒருவரிடம் இக்கடிதத்தை கொடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் பொலிஸாரின் நடவடிக்கை அப்பகுதி தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இன்று பொலிஸார் தாமாகவே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.