siruppiddy

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பொலிஸ் நிலையத்தை அகற்றுவதை தடுத்து

.வவுனியா பண்டாரிக்குளம் “பைட்டர் கிறெளன்ட்” என்று அழைக்கப்படும் பொலிஸ் நிலையம் பொது மக்களின் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவில் சமுக செயல்பாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது.
பொது மக்களின் குடிமனைகளுக்கிடையே அமைந்திருக்கும் குறித்த பொலிஸ் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக சிவில் சமுக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் “குறித்த பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டாமென்றும், பொலிஸ் நிலையம் குடிமனைகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது தமக்கு நன்மை என்றும் பொதுமக்கள் கூறுவது போன்று” பொலிஸாரால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில், பண்டாரிக்குளத்திலுள்ள வர்த்தக வாணிப நிலையங்கள், பொது மக்களின் வீடுகளுக்கு சென்றும், வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களை மறித்தும்

கையெழுத்து பெறும் நடவடிக்கையில் இன்று காலையிலிருந்து பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 16 வயது பொதுமகன் ஒருவரிடம் இக்கடிதத்தை கொடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் பொலிஸாரின் நடவடிக்கை அப்பகுதி தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இன்று பொலிஸார் தாமாகவே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக