siruppiddy

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வேளாண் ரசாயனத் தொழிலில் வளர்ச்சி,,


சுவிட்சர்லாந்தில் பேசெல்(Bazil) நகரத்தில் உள்ள சின்ஜெட்டா(Syngenta) என்ற வேளாண் ராசயன நிறுவனம் கடந்த 2012ல் 17% இலாபம் பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சந்தை கண்காணிப்பாளர்கள் இந்த நிறுவனத்துக்கு 1.7 பில்லியன் டொலர்கள் இலாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் இந்தக் கணிப்பை பொய்யாக்கி சின்ஜெட்டா வேளாண் ராசயன நிறுவனம் 1.8 பில்லியன் இலாபம் பெற்றுள்ளது. சின்ஜெட்டாவின் இந்த இலாபத்திற்கு அடிப்படைக் காரணம் இங்கு நிலவிய மோசமான தட்பவெப்பச் சூழ்நிலை தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிரைப் பாதுகாக்கவும், அதிக விளைச்சல் பெறவும் சின்ஜெட்டாவின் தயாரிப்புகளையே அதிகமாக நம்பியிருந்தனர். வட அமெரிக்காவில் 1950க்குப் பின்பு இதுவரை கண்டிராத கடும் வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டதால் அங்கு சோளம் விளைய சின்ஜெட்டா ரசாயனத் தயாரிப்புகள் பெரிதும் உதவியாய் இருந்தது. இப்பொருட்களின் விற்பனை இந்த ஆண்டு 103 பில்லியன் டொலர்களை தொட்டுள்ளது. கடந்த 2012ல் கடைசி மூன்று மாதங்களில் வட அமெரிக்காவில் 28 சதவீகிதமும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் 18 சதவீகிதமும் சின்ஜெட்டா பொருட்களின் விற்பனை அதிகமாயிற்று. பிரேசிலில் சோளம் அதிகம் விளைவதால் சின்ஜெட்டா அடுத்த ஆண்டு அங்கு 77 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யத் தாயராகி வருகிறது. இதனால் எதிர் வரும் 2020 ல் இந்நாட்டில் சோளம் இரண்டு மடங்காக விளையும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக